என் மலர்
நீங்கள் தேடியது "நிதி ஆயோக்"
- அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
- மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.
அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். காரணம், 250 ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஐக்கிய இராஜ்ஜியத்தை இந்தியா முந்தியது" என்று தெரிவித்தார்.
- நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
- தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக விஜய் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது குறித்து முதலமைச்சர் கூறிய காரணங்கள் அனைத்தும் தற்போதும் தொடர்வதாகவும் டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் காரணமாகவே, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
அமலாக்கத்துறை சோதனை, வழக்குகள் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை என முதலமைச்சரால் வெளிப்படையாக கூற முடியுமா எனவும், நிதி ஆயோக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம், தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விஜய் விமர்சித்து உள்ளார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.வை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று தக் லைப் பாணியில் அவர் பதில் அளித்தார்.
- முதல்வர் ஸ்டாலின், இம்முறை மட்டும் ஏன் நிதிஆயோக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும்?
- எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்
பாஜகவுடன் மறைமுக கூட்டணி என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வரிசை கொடுக்கப்பட்டுள்ளது என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.
அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே. தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது. உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் டெல்லிப் பயணம் அமைந்துள்ளது.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடாங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம்.
சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள். இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம் அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்!
என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை நடவடிக்கை. காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை. நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்.
உண்மையிலேயே அந்தச் சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்திற்காகவும் ஒன்றிய அரசின் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?
அது மட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், தி.மு.க.வை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில், பா.ஜ.க.வால் எப்படி இவர்களைக் கொஞ்சிக் குலாவி வரவேற்க இயலும்? நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுகக் கூட்டின் வெளிப்பாடு.
இச்சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அந்தப் புகைப்படத்தில்,
பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒருபுறம் முன்வரிசையில் நிற்கிறார். அதே முன்வரிசையில் இன்னொரு புறம். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிற்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒருவருக்கு வெளிப்படைக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை?
இது சாதாரண நிகழ்வு போலத் தோற்றம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதுவே இதன் பின் இருக்கும் மிகப் பெரிய உண்மை.
ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
- அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.
- யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திருச்சி:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு, கடமை.
பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர் மூலமாக நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.
பா.ஜ.க., தி.மு.க.வோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் வெளிப்படுகிறது. தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல. அதில் என்ன ஐயம் இருக்கிறது என்றால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
அவ்வாறின்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.
- இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்பின், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. நாம் நான்காவது பெரிய பொருளாதாரமாகி விட்டோம். 4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.340 லட்சம் கோடி) பொருளாதாரமாகி விட்டோம்.
ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.
தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகள்தான் இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.
திட்டமிட்டபடி, எண்ணியபடி உறுதியாக செயல்பட்டால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என தெரிவித்தார்.
- நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு பேசினேன்.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
சென்னை 2ம் கட்ட மெட்ரோ, கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
அமலாக்கத்துறை மீது நீதிமன்றத்தின் கண்டனம் தெரிவித்த நீதிபதியின் கருத்து நியாயமானது.
எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.
என்னிடம் வெள்ளைக் குடையும் இல்லை, இபிஎஸ்-யிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
- 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்:-
கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
'P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.
நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.
சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும்.
- விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு.
பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் கவுன்சில் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும். டீம் இந்தியா போன்று மாத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு. ஒவ்வொரு மாநிலமும் விக்சித் ஆகும்போது, பாரத் விக்சித் ஆகும். இது 140 கோடி மக்களின் விருப்பமாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
- நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை 4.30 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மாலை 6.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
- நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று பிற்பகல் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவெளியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.
- நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
- முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.
அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது.
- பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா?
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது ஏன்?
* இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது.
* இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்?
* இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுடும் தைரியம் பயங்கரவாதிகளுக்கு எப்படி வந்தது?
* பயங்கரவாதிகள் குழு நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி திரும்பி விட முடியும் என்கிற எண்ணம் எப்படி வந்தது. அந்த எண்ணமே வந்து இருக்கக்கூடாது. அவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள். நினைத்தாலே போட்டுத்தள்ளி விடுவார்கள் என்கிற பயம் இருந்திருந்தால் அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும்.
* புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா. பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா?
* சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






